சேலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சேலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் எஸ்ஐ பரமசிவன் தலைமையிலான போலீசார் பள்ளப்பட்டி ராவணேஸ்வரர் நகர் முனியப்பன் கோவில் பகுதியில் நேற்று வாகன தனிக் கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் இரும்பாலை எஸ் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story