மேலூர் அரசு கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை மேலூர் அரசு கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று (28.3.2025) விளையாட்டு விழா தொடங்கியது. . இவ்விழாவின் துவக்கமாக வேதியியல் துறை இணைப் பேராசிரியர் மகேஸ்குமார் வரவேற்புரையாற்றினார். பொருளியல் துறை இணைப் பேராசிரியர் தாஹிரா பானு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரி முதல்வர் அந்தோணி செல்வராஜ் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர் மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவரும், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் தனது சிறப்புரையில் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ.மாணவிகளை பாராட்டியும், மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் இயற்கையாகவே உடற்திறன்மிக்கவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கக்கூடியவர்கள் எனவும் பல்வேறு சாதனைகளை இன்றும் நிகழ்த்தி வருகின்றார்கள் என்றார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story