சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X
பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்து அச்சுறுத்தி வரும் அம்மாநில முதல்-அமைச்சர் பகவந்தமான் அரசை கண்டித்தும் சேலம் கோட்டை பகுதியில் நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் தலைமையில் பொதுச்செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர் சரவணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும். எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும். 120 நாட்கள் கடந்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடரும் ஜக்ஜித்சிங் டல்லேவால் உயிரை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story