அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா
X
மாணவ மாணவியர் அணிவகுப்பு
சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர் பேரவை அமைப்பு சார்பில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக புதுமை படைப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைப்பு இயக்குனர் ஞானசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அறம்செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் ஜீவா ரவி வாழ்த்தி பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜெயபாரதி அறிக்கை வாசித்தார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சூர்யா, நுண்கலை அமைப்பு ஆலோசகர் உமா மகேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரா, மாணவ பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story