கோவை: பட்டா முறைகேடு மோசடி - மூதாட்டி தற்கொலை முயற்சி!

X

கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜியா பேகம் என்ற மூதாட்டிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா, அவர் இல்லாத நேரத்தில் ரத்து செய்யப்பட்டு, 14-வது வார்டு திமுக கவுன்சிலர் வேலுமணியின் பரிந்துரையின் பேரில் கலைச்செல்வி என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையறிந்த ரஜியா பேகம், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தகர கொட்டகை அமைத்துள்ளார். ஆனால், இ-பட்டா பெற்ற கலைச்செல்வி கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்ததையடுத்து, அதிகாரிகள் ரஜியா பேகம் அமைத்த கொட்டகையை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரஜியா பேகம், தான் அமைத்த கொட்டகை முன்பு சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story