கோவை: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் !

கோவை: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் !
X
தமிழ்நாட்டில் நல்ல ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக 10 நாள் சண்டி ஹோமம் நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு கோட்ட பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நல்ல ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக 10 நாள் சண்டி ஹோமம் நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு கோட்ட பொறுப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக சைதன்ய நவராத்திரியை கொண்டாடி வருகிறோம். இது தமிழ்நாட்டில் பொதுவாக யாரும் கொண்டாடுவது இல்லை. தமிழ்நாட்டில் அக்டோபரில் வரக்கூடிய சரஸ்வதி பூஜையைத்தான் பிரபலமாக கொண்டாடுகிறார்கள். சைதன்ய நவராத்திரி தேவர்கள் மற்றும் மகரிஷிகளால் கொண்டாடப்பட்ட விழா. இதை திரிவேணி காட்டில் மூன்று முறை செய்திருக்கிறோம். இந்த முறை பிரயாக்ராஜில் செய்தோம். தமிழ்நாட்டில் நல்ல ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக 10 நாள் சண்டி ஹோமம் நடத்த இருக்கிறோம். இதனால் வரக்கூடிய அனைத்தும் நன்மை கொடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
Next Story