சங்கரன்கோவில் அருகே பசு மாட்டிற்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகள்

X

பசு மாட்டிற்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெங்கநாதபுரம் கிராமத்தில் குடியிருக்கும் சேகர்-சுப்புலெட்சுமி என்பவர் வளர்க்கும் பசுமாடு இரண்டு கன்றுக்குட்டிகள் ஈன்றுள்ளது இரண்டுமே பெண் கன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது இதுபோன்று ஒரே பிரசவத்தில் இரண்டு கன்று குட்டிகள் பிறப்பது மிகவும் அரிதான ஒன்று என்றும், அதில் ஒரே நேரத்தில் ஆண் கன்று ஒன்று பெண் கன்று ஒன்று பிறந்தால் இவற்றில் ஏதாவது ஒன்று வளர்ச்சியில் பின்தங்கி வளரும் என்றும், இரண்டுமே ஆண் அல்லது பெண் கன்று ஆகப் பிறந்தால் இரண்டும் நன்றாக வளர்ச்சி பெரும் எனவும் தெரிவித்தனர்.
Next Story