கோவை: இளம் பெண் கொலை - ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

X

முன்விரோதம் காரணமாக 26 வயதுடைய பெண்ணை கடத்தி வந்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோமங்கலம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை கடத்தி வந்து கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கோமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி சதீஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.4000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் மோகன்ராஜ் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Next Story