கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.*

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.*
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளியின், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் ஆசிரியர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர். பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் அமைப்பாளர் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், கவிதை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல் வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைதத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், தமிழர் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவரை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் நன்றி உரை ஆற்றினார்.
Next Story