கோவை: ஓம்னி கார் தீப்பிடித்து எரிந்து விபத்து !

கோயம்புத்தூர், காட்டூர் அருகே, சின்னசாமி சாலையில் ஓம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
கோயம்புத்தூர், காட்டூர் அருகே, சின்னசாமி சாலையில் ஓம்னி கார் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் மூன்று பயணிகள் மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்புகையில், கார் எல்பிஜியிலிருந்து பெட்ரோலுக்கு மாறும்போது புகை வந்து தீப்பிடித்தது. அனைவரும் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர். ஓட்டுநர் உரிமம் இல்லாத சந்தோஷ் குமார் ஓட்டிய கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story