நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் !

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் !
X
கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி முன்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்து, கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி முன்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்து, கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கணியூர் சுங்கசாவடி முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் பொழுது மத்திய அரசு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிதியை ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருவதாகவும், உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மாதம் தோறும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் கொடுத்து வரும் நிலையில், ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story