மேலூரில் திருவிளக்கு பூஜை

X

மதுரை மாவட்டம் மேலூர் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மில்கேட் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் 43-ம் ஆண்டு பங்குனி உற்சவ விழாவானது கடந்த 20-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நேற்று (மார்ச்.28)நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருட் பிரசாதத்தை பெற்றுச்சென்றனர்.
Next Story