காங்கேயம் அருகே அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா

காங்கேயம் அருகே அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா
X
மருதுறை அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா
நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா, பள்ளி வளர்ச்சி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா.கனகராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் .கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் அ.பிரபு செபாஸ்டியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கோட்டை சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் ரேணுகா ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ப.சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர் மோகன்ராஜ் ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றி தழ்கள் வழங்கினார்கள். விழாவில் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர், பள்ளி புரவலர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது விழா நிறைவாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.கனகராஜ் 2023 2024 கல்வி ஆண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற போது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.10 ஆயிரம் நிதியில் வரலாறு, பொது அறிவு களஞ்சியம் உட்பட பல்வேறு புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு இலவசமாக வழங்கினார். முடிவில் ஆசிரியர் ஜோசப் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை பள்ளி ஆசிரியர்கள் ச.சிவகுமார், குழந்தை தெரஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள்.
Next Story