முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அனுமந்தபுரத்தில் மத்திய அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00மணி அளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அனுமந்தபுரம் பேரூந்து நிறுத்தம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெற வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார் .மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து,மோடி... மோடி... என்னாச்சு எங்க பணம் 4000 கோடி? - சம்பளம் கொடு... சம்பளம் கொடு... 100 நாள் வேலைக்கான சம்பளம் கொடு..” என திமுகவினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் . MVT.கோபால் MABL முன்னிலை வகித்தார். ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள், BLA2,BLC முகவர்கள்,,கழக இந்நாள்,முன்னாள் மூத்த முன்னோடிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story