ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
X
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அரியலூர், மார்ச்.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு பட்டத்தினை வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாவட்ட கலெக்டர் ரெத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி துறைத்தலைவர்கள் மா.ராசமூர்த்தி, கார்த்திகேயன், வடிவேலன், சக்திமுருகன், அன்பரசன், நந்தகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி ஆரம்பித்து முதலாம் ஆண்டு படித்து முடித்த 328 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது .இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி, அறிவியல், வணிகவியல் படித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story