கைதி தப்பி ஓட்டம்

X

தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீசார் தீவிரம்
ஈரோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் மொபைல் போன் டவரில் கடந்த 25-ம் தேதி அலாரம் தொடர்ந்து அடித்தது. டவர் கண்காணிப்பாளரான வெங்கடாசலம் தனது குழுவினருடன் அங்கு சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் டவர் கேபிள் ஒயர்களை துண்டித்து திருடிக் கொண்டிருந்தார். அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வெள்ளோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, ரிங் ரோடு பகுதியைச் சேர்ந்த ரூபிகான் (35) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த 26 ஆம் தேதி ரூபிகானை பெருந்துறையில் உள்ள கிளை சிறையில் அடைக்க வெள்ளோடு நிலையத்தை சேர்ந்த ஏட்டுகள் இருவர் ரூபிகானை அழைத்து சென்றனர். பெருந்துறையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது போலீசார் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். ரூபிகானை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவரது புகைப்படத்தை அருகில் இருக்கும் மாவட்ட சேர்ந்த போலீசாருக்கும் அனுப்பி உள்ளனர். ரூபிகான் தப்பி ஓடிய போது பணியில் இருந்த இரண்டு போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது.
Next Story