கோவை: நிதியை விடுவிக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்!

X
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் 100 நாள் வேலைக்குச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் போராட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருவதை கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் 100 நாள் வேலைக்குச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தொண்டாமுத்தூர் ரவி, "மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறுவதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்றதை குறிப்பிட்ட அவர், இந்த பணத்தை தான் பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணிய நிலையில் அவர்கள் ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்கு மோடியுடன் கைகோர்க்க சென்றதாக விமர்சித்தார். மேலும், மத்திய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story

