ஆலப்பாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

X

ஆலப்பாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி 100 நாள் திட்டத்தின் கீழ் பணி செய்த பணியாளர்களுக்கு கடந்த நான்கரை மாதங்களாக ரூ.4 034 கோடி மத்திய அரசு ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து தமிழக முழுவதும் இன்று 1134 இடங்களில் 100 நாள் பணியில் ஈடுபடும் ஊழியர்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவரும், தமிழக முதலைமைச்சருமான மு. க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மி மதுசூனன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் 100 நாள் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story