நூதன போராட்டம்

கருப்புத் துணி அணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்
இன்று முதல் இரண்டாம் தேதி வரை வணிகர்கள் கருப்பு உடை அணிந்தும் வணிகர்கள் கடைகள் முன் கருப்பு கொடி கட்டி போராட்டம் இ -பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் வணிகர் சங்கம் கருப்பு உடை அணிந்து போராட்டம் ... உதகை, மார்க்கெட் பகுதியில் வணிகர்கள் கடைகள் முன் கருப்பு கொடி கட்டியும் கருப்பு உடை அணிந்தும் இ- பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வணிக சங்கங்களின் சார்பில் வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் எதிர்வரும் இரண்டாம் தேதி வணிகர்கள் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப் போவதாக தெரிவித்தனர் மேலும் மாவட்டம் முழுவதும் பயணம் செய்து எதிர்வரும் இரண்டாம் தேதிக்கு முழு கடை அடைப்புக்கு முழு ஆதரவு தர வேண்டும் எனவும் நீலகிரி மாவட்டம் மக்கள் மிகவும் துயரமான சூழ்நிலையில் உள்ளதாகவும் இதனை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கருப்பு உடை அணிந்து அரசின் கவனத்தை ஈர்க்க போவதாக தெரிவித்தனர்.
Next Story