ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

X

ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
எல்.எண்டத்தூர், வேடந்தாங்கல், கள்ளபிரான்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! செங்கல்பட்டு மாவட்டம் எல்.எண்டத்தூர், வேடந்தாங்கல், கள்ளபிரான்புரம் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு சுமார் ஆறு மாத காலமாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து ஒன்றிய கழக செயலாளர்கள் சத்யசாய், தம்பு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசு மோடி அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கி விடு, வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காது, நிதியை வழங்கு நிதியை வழங்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நிதியை வழங்கு என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story