முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

X

தர்மபுரி மேற்கு ஒன்றியத்தில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி மேற்கு ஒன்றியத்தில் இன்று தர்மபுரி Bsnl அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA தலைமையில், நடைபெற்றது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்காவேரி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காசிநாதன் மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ரஹீம்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி தலைமை செயற்குழு உறுப்பினர் M G சேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story