ஏந்தல் பகுதியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

X

திமுக மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
போளூர் அடுத்த ஏந்தல் பகுதியில் திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர் தலைமையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை இதுவரையில் வழங்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் குடும்பம் நடத்துவதற்கு கையில் பணம் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர் மத்திய அரசிடம் பல முறை தமிழக அரசு கோரிக்கை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இன்னும் 100 நாள் வேலை பணியாளர்களின் நிலுவை தொகையை மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்காமல் இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் உட்பட பணியாளர்கள், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 850 கழக ஒன்றியங்களில் 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்கு செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஏந்தல் பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர் தலைமையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது உடன் போளூர் நகர செயலாளர் தனசேகரன் வழக்கறிஞர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் காசி மாவட்ட ஆதிதிராவிடர் அணி சாது ஆனந்த் மதிவாணன், ஒன்றிய துணைச் செயலாளர் இருதயம், மாவட்ட மாணவரணி மணிபாரதி, ஒப்பந்ததாரர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணி சுரேந்தர், அரிகிருஷ்ணன், ரெண்டேரிப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, ரமேஷ், சுந்தர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story