நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பண்டஅள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் பண்டஅள்ளியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து பண்டஅள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைகுந்தம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இராஜகோபால்,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் சின்னசாமி கன்னியப்பன் செல்லப்பெருமாள்,மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா நீதிபதி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரவி ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ் பொறியாளர் அணி செல்வம் ஓட்டுனர் அணி மாது,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மகளிர் அணி ராணி மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் , இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story