குடும்பத் தகராறு இளம்பெண் தற்கொலை

தர்மபுரி நகரப் பகுதியில் குடும்பத்த தகராறில் இளம் பெண் தற்கொலை காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை
தர்மபுரி சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது. புவனேஸ்வரியின் குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த புவனேஸ்வரி,இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில், நகர காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story