அவனியாபுரத்தில் டிடிவி தினகரன் பேட்டி

X

மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.
மதுரை அவனியாபுரத்தில் அமமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் இன்று ( மார்ச்.29)TTV தினகரன் கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே உள்ளோம் அவர்கள் தான் டெல்லியில் போய் வெளிப்படையா இல்லாமல் மறைமுகமாக ஒளிந்து டெல்லிக்கு சென்றது யார் என்று தெரியும். அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் மத்தியில் உள்ள அமைச்சர்களை சந்தித்து வருகிறார் என்ன பேச்சுவார்த்தை என்று நான் தான் பலமுறை சொல்லி வருகிறேன். திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் நீடிக்க கூடாது மக்கள் விரோத ஆட்சி அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி தான் சரியாக இருக்கும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக எந்த கட்சி வேண்டுமென்றாலும் திமுக அரசுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாக எந்தக் கட்சியை எந்த கூட்டணி வந்தாலும் அது வரவேற்பு தக்கது ஒன்றுதான். சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு? திமுக அமைச்சர் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சிலர் சுயநலத்தால் பதவி வெறியால் திமுக மீது பயத்தால் தன் மீது வழக்குகள் வந்து விடக்கூடாது என்ற பயத்தினால் திமுக தேர்தல் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவி பெறுவர் யார் என்று தெரியும் என்றார்.
Next Story