போக்சாவில் ஒருவர் கைது

போக்சாவில் ஒருவர் கைது
X
போக்சோ வில் ஒருவர் கைது
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோடம்பாளையம், சண்முகாபுரம் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் குற்றவாளி செந்தில் @ செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் பாராட்டியுள்ளார்.
Next Story