குன்றத்தூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
னமதுரை தெற்கு மாவட்ட திமுக தே.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் டி..குன்னத்தூரில் இன்று (மார்ச். 29) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான (MGNREGA) நிதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல்- தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார் இக்கண்டன கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தே.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Next Story