மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.4034 கோடி நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.4034 கோடி நிதி வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்! 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.4034 கோடி நிதி வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க.அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கும் ரூ.4034 கோடி நிதி வழங்காமல் துரோகம் செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், மாவட்ட அரசு குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், தொ.மு.ச.இவுண்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நெ.அருண்குமார், ஒன்றிய துணை செயலாளர் எசனை ஆதித்யன், ஒன்றிய பொருளாளர் இரா. கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில், ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.அருண், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சந்திரமோகன், இளம் பேச்சாளர் காருண்யா நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேப்பூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள குன்னம் கிராமத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி , மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் தி.மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் செ.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கழக துணைச்செயலாளர் தழுதாழை.பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில், ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
Next Story