பூண்டியில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய்.சொல்லுவது நடிகை திரிஷா-விற்கு சொல்லி இருப்பதாக பூண்டியில் மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய்.சொல்லுவது நடிகை திரிஷா-விற்கு சொல்லி இருப்பதாக பூண்டியில் மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் பூண்டி BDO OFFICE எதிரே கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் மத்திய மோடி பாஜக அரசு தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை நிறுத்தி உள்ளதை கண்டித்தும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களுக்கு சேர வேண்டிய 100 நாள் வேலை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் இன்றைக்கு நடக்கக்கூடிய ஆட்சி மக்களுக்கான ஆட்சி மாணவ, மாணவிகளுக்கான ஆட்சி குறிப்பாக பெண்களுக்கான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரகவித்த அவர் த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன் என கூறுகிறார் அவர் மனைவி எங்கே அம்மா எங்கே அப்பா எங்கே அவர்களே உங்களுடன் இல்லை நீங்க யாருக்கு பாதுகாப்பு கொடுப்பாய் நீங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் சொல்லுவது நடிகை திரிஷா- விற்குகாக சொன்னாயா.. என சர்ச்சைக்குரிய விதமாக பேசினார். மேலும் த.வெ.க கட்சி விஜய் மோடி அரசின் B டீமாக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், கைதட்டும் கூட்டத்தை நம்பி சினிமாவில் கல்லா கட்டுவதை விட்டு விட்டு தற்போது அரசியலுக்கு வந்து எனக்கு முதல் எதிரியே மு.க.ஸ்டாலின் தான் என சொல்லி இருக்கிறார். ஆனால். மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறார் மகளிர் கூட்டம் இருக்கும் வரை மு.க.ஸ்டாலினை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. என் தெரிவித்து உள்ளார்.
Next Story