கரூரில் பள்ளி மாணாக்கர்களுக்கு நடைபெற்ற கல்வி கண்காட்சியை திறந்து வைத்தார் முன்னாள் ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் பாரி.

கரூரில் பள்ளி மாணாக்கர்களுக்கு நடைபெற்ற கல்வி கண்காட்சியை திறந்து வைத்தார் முன்னாள் ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் பாரி.
கரூரில் பள்ளி மாணாக்கர்களுக்கு நடைபெற்ற கல்வி கண்காட்சியை திறந்து வைத்தார் முன்னாள் ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் பாரி. கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது தொடர்பாக தனியார் நிறுவனம் நடத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி கண்காட்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சார மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அஸ்வின் மாணாக்கர்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பான விரிவான ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் சார்பாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு தங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், சலுகைகள் போன்றவற்றை விளக்கி கூறினார்.
Next Story