திமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடை தெரு பகுதியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடைத்தெரு பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 4000 கோடியை தமிழ்நாட்டுக்கு தர மறுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடைத்தெரு பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர்,உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story