அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா

X
Komarapalayam King 24x7 |29 March 2025 6:16 PM ISTகுமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா, விளையாட்டு விழா ஆகிய நாற்பெரும் விழா, கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நசீம் ஜான் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இவர் பேசியதாவது: மாணவ, மாணவியர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாது, ஆக்கபூர்வமாக தனக்கும், தன்னை சார்ந்தோர்களுக்கும் மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவை பெருக்கி கொண்டு, சிந்தித்து செயல்பட வேண்டும். சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். பெற்றோர்களை காலமெல்லாம் காக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் நாமக்கல் அரசு கலை கல்லூரி இணை பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் ரகுபதி, பத்மாவதி, சரவணாதேவி, ரமேஷ், மகாலிங்கம், மனோஜ், உடற்கல்வி இயக்குனர் பிரியா, உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களின் நடனங்கள், நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Next Story
