மக்கள் நீதி மையம் சார்பில் நன்றி தெரிவிப்பு

X
Komarapalayam King 24x7 |29 March 2025 6:23 PM ISTகுமாரபாளையம் அருகே சாலை குண்டும் குடியமாக இருந்ததற்கு புகார் தெரிவித்து உடனடியாக சீர் செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மையம் சார்பில் நன்றி தெரிவிப்பு
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், விபத்து பள்ளங்களை சரி செய்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகில் ஓலப்பாளையம் அரசு கலைக்கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால் பொது மக்களின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.எங்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினா
Next Story
