கபிலர் மலையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

கபிலர் மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒத்துகாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், மார்ச். 29: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை ரூ.4034 கோடியை விடுவிக்காத மதிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு திமுக சார்பபில் நடைபெற்றது. கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ் மூர்த்தி தலைமை தங்கினார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே கே சண்முகம் முன்னிலை வகித்தார்.100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ. 4034 கோடி ரூபாயை உடனே வழங்க வலியுறுத்தியும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரம், ஒன்றியம், பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story