மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

X

மதுரை அருகே திருநகர் அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக செல்வாக்கை இழந்து வருவதால் விஜயின் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதிமுக கட்சி அமித்ஷாவின் கட்சியாக மாறி வருகிறது. -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: எதிர்க்கட்சி உறுப்பினர் துணை சபாநாயகர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை,பிஎஸ்சி குழுவில்ஆலோசித்து தான் வரான் மனதில் விவாதம் நடைபெறும். ஆனால் பிஎஸ்சி குழுவில் விவாதம் செய்வதை விட்டுவிட்டு புதிது அல்ல சட்டங்களை கொண்டு வருகிறார்கள்.ராணுவம் தொடர்பாக இந்த ஒரு விவாதமும் இதுவரை நடத்தப்படவில்லை. ஒத்திவைப்பு தீர்மானம் என்பது ஏற்றுக் கொள்ளப்படாமல் உள்ளது. விவாதங்களை அரசு தொலைக்காட்சி தான் ஒளிபரப்பு மற்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில்லை.எதிர்க்கட்சிகள் பேசுவதை ஒளிபரப்புவதில்லை அவருடைய ஒளிபரப்பினாலும் குறைந்த வினாடிகளே ஒளிபரப்புகிறார்கள். முறையான வாய்ப்பு வழங்காததால் தொகுதி பிரச்சனைகள் முழுமையாக பேச முடியாத சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பான கருத்துக்களைச் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி உத்தரவிட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருவதாக எம்பி தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அதிகாரிகள் தான் கையாடல் செய்கிறார்கள் என அண்ணாமலை கூறியதற்கு: அண்ணாமலை 100 நாள் வேலையை நேரில் சென்று பார்த்தது கிடையாது.தயவுசெய்து அண்ணாமலை 100 நாள் வேலையை நேரில் சென்று பார்க்க வேண்டும்.முறைகேடு நடக்கும் இடத்தை விட்டு விட்டு100 நாள் வேலைகளில் முறைகேடு செய்வதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலைக்கு இது பற்றி தெரியாது, ஒரு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நான்கு மாத ஊதியம் வழங்காதது பச்சை துரோகம். இது தவறான போக்கு மாநில அரசு மீது மக்களுக்கு கோபம் வரும் என நினைக்கிறார்கள். அதிமுக காரர்களுக்கு இதுபற்றி நன்றாக தெரியும். ஆர்.பி.உதயக்குமார் மூன்று வாரங்களுக்கு முன்பு பேசிய பேச்சு தற்போது பேசிய பேச்சு எல்லாம் மக்களுக்கு தெரியும்ஹாப்பி உதயகுமார் பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். மதுரை விமானநிலையம் போன்ற விமான நிலையங்களுக்கு வழங்கிய விமானங்களை நிறுத்தி விட்டார்கள். அதிமுக அமித்ஷா திமுககவாக விரைவில் மாறிவிடும். அதிமுக நிர்வாகிகள் புகார் தெரிவிப்பதற்காகத்தான் அமித்ஷாவை சந்திக்கிறார்கள் -அதிமுக மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிமுக செல்வாக்கை இழந்து வருவதால் விஜயின் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதிமுக கட்சி அமித்ஷாவின் கட்சியாக மாறி வருகிறது. பாஜகவும், திமுகவும் பாசிச ஆட்சி நடத்தி வருவதாக விஜய் கூறியதற்கு இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்து ஆர் எஸ் எஸ். திமுக அது போன்று இல்லை. தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகளை வெளி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது ஜாதி கலவரங்கள் தான். குற்ற சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கணக்கிடப்படாது. குற்ற சம்பவங்களை தடுக்க நேர்மையான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கூறினார்.
Next Story