ஒரத்தநாட்டில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு பிரச்சாரம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் துவக்கி வைத்தார் 

ஒரத்தநாட்டில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு பிரச்சாரம் 
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு சார்பில், அகில இந்திய மாநாட்டையொட்டி, நகரில் 24 செங்கொடிகள் ஏற்றப்பட்டு, செந்தொண்டர் அணிவகுப்பும், ஒன்றியம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சாரம் துவக்க நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கொடியேற்றி பிரச்சாரத்தை துவக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரை. ஏசுராஜா, வழக்கறிஞர் ஏ.அருணாதேவி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு மற்றும் ஒன்றியக்குழு தோழர்கள், நகரக் கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர். பிரச்சாரம் ஞாயிறன்றும்  நடைபெறுகிறது.
Next Story