வேலூர் பேரூராட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்.

X
Paramathi Velur King 24x7 |29 March 2025 7:56 PM ISTவேலூர் பேரூராட்சி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
பரமத்திவேலுார்,மார்ச்.29: நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.தி.மு.க. கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், துணைத்த லைவராக உள்ளனர். ராஜாவும் தலைவர், கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக. சில மாதங்களாக பேரூராட்சி கூட்டம் நடத்தப்படாமல் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அனைத்து கவுன்சிலர்களிடமும், செயல் அலுவலர் மூவேந்திரபண்டியன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ப்பட்டது. இந்நிலையில் நேற்று பேரூராட்சிமன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மூவேந்தரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில், 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 34 தீர்மானங்கள் ஒரே நாளில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
