பேராவூரணி அரசுப்பள்ளியில் ஆண்டு விழா 

பேராவூரணி அரசுப்பள்ளியில் ஆண்டு விழா 
X
பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் சு.விஜயலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் த.ரஞ்சித் குமார் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மற்றும் பாடங்களில் தனிச்சிறப்பு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.  நிகழ்ச்சியில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர், தொழிலதிபர் எஸ்.டி.டி.சிதம்பரம், வர்த்தக கழக முன்னாள் செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மு.த.முகிலன்,  எம்.ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.சிதம்பரம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சு.செல்வகுமார், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மு.நடராஜன், ஏ.டி.ஏ. சரவணன், வீ.தனபால், கிரில் ஆர். நீலகண்டன், மு.மூர்த்தி,  செ.கிருஷ்ணமூர்த்தி, பத்திர எழுத்தர் சௌ.சுதாகர், தலைமை ஆசிரியர் கோவி.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல், நடன, நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story