உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்,நூற்றாண்டு விழா

X

உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்,பள்ளிக் கல்வித்துறை அரியலூர் மாவட்டம்,பள்ளி நிர்வாகம் சார்பில்,நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அரியலூர், மார்ச்29- ஜெயங்கொண்டம் அருகே ,உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்,பள்ளிக் கல்வித்துறை அரியலூர் மாவட்டம்,பள்ளி நிர்வாகம் சார்பில்,நூற்றாண்டு விழா & 2024 - 2025 -ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா,பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நடைபெற்றதில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றி,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு,பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் கா.பத்மாவதி,மாவட்ட பிரதிநிதி கோவி.சீனிவாசன்,மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் க.சம்பந்தம் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள்,இருபால் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள்,கிளை கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story