இப்தார் விருந்து நிகழ்ச்சி -அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பில் நோன்பு திறக்கும் இப்தார் விருந்து நிகழ்ச்சி -அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்பு
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான். கடந்த 2ம்தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பு துவங்கி வரும் 30ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இஸ்லாமியர்கள் நோன்பு சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடித்து மாலை நோன்பு திறப்பது வழக்கம். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் விருந்து நிகழ்ச்சி திரேஸ்புரம் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ் டி ஆர் பொன்சீலன் தலைமை தாங்கினார். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார் மேலும் ஒன்றிய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகிறது இதை எதிர்த்து தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு ஆணாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அகுமது இக்பால், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநகரத் தலைவர் நவரங் சகாப்தின் பொருளாளர் மேட்டுப்பட்டி மிராசா, அருட்தந்தை அமல்ராஜ், சிவன் கோயில் பட்டர் சிவ ஹரி சங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி மாவட்ட தலைவர் அருண்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story