சேலத்தில் ரேஷன் பொருட்கள் திருடிய வாலிபர் கைது

X

போலீசார் நடவடிக்கை
சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ், (வயது 24). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் நல்லாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருடி சென்றார். இதுகுறித்து விற்பனையாளர் பிரவீன்குமார் கருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்.
Next Story