சேலத்தில் திருநங்கையை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

சேலத்தில் திருநங்கையை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 26). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரேயா (30) என்ற திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று மாரியம்மன் கோவில் அருகே ஸ்ரேயா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்குமாருக்கும், இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த பீர்பாட்டிலை எடுத்து ஸ்ரேயாவை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கிச்சிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராம்குமாரை கைது செய்தார்.
Next Story