சேலம் தாதகாப்பட்டி மேட்டுத் தெரு அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

சேலம் தாதகாப்பட்டி மேட்டுத் தெரு அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
X
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சரளா தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் தேவா என்கிற தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் ஏ.எஸ்.சரவணன், 55-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி சதீஷ்குமார், ஜீவானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story