கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்து
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடுநோக்கி வரும் ரோட்டில் எட்டிமடை புதூர் பிரிவு குமரன் கல்வி நிலையம் அருகே இன்று அதிகாலை கள்ளக்குறிச்சியில் இருந்து சவுக்கு மர லோடு ஏற்றிக்கொண்டு ராஜசேகர் 37 , த/பெ ஏழுமலை, 4/62 நடுத்தெரு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் . என்பவர் TN28AJ2797 என்ற எண்ணுள்ள லாரியை ஓட்டி வந்துள்ளார். அதிகாலை சுமார் 4:30 மணிக்கு எட்டிமடை புதூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓட தொடங்கி ரோட்டின் வலது புறத்தில் உள்ள செல்வம் செட்டிநாடு மெஸ் என்ற அருண் பாண்டியன்(30), த/பெ செல்வம், என்பவரதுஹோட்டல் சுவரில் மோதி நின்றது. சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில் செல்வதற்காக வரும்பொழுது லாரி கட்டுபாட்டை இழந்து வளைவில் திரும்பாமல் நேராக சென்று தகரக் கொட்டையிலான ஹோட்டலின் உள்ளே புகுந்து ஹோட்டலின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவரில் மோதி லாரி நின்றுவிட்டது. இதில் ஓட்டலின் ஒரு புறமும், காம்பௌண்ட் சுவரும் இடிந்துவிட்டது. ஹோட்டலில் யாரும் இல்லாததால் யாருக்கும் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை. லாரி ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.சம்பவம் குறித்துதிருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ஓட்டுனர் தூக்குக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது லாரியில் ஏதேனும் பழுது ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை லேசான காயம் அடைந்த லாரி ஓட்டுநர் ராஜசேகர் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.மழை அடிவாரத்தின் இறக்கமான பகுதி என்பதால் அடிக்கடி இதுபோல் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அதிகாலை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை இன்னும் ஒரு மணி நேரம் கடந்து இருந்தால் நிறைய மக்கள் நடமாட்டம் இருந்திருக்கும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவே அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.விபத்து நடந்த பகுதியை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு திருச்செங்கோடு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டனர்.
Next Story