வேம்பனூர் இணைப்பு பாலம் அமைக்க மனு

X
மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வேம்பனூர் கிராமம் கலையரங்க அருகில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தனிஅலுவலர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானம் நிறைவேற்றபட்டது. மேலசங்கரன்குழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வேம்பனூர் இணைப்பு பாலமாக பன்றி வாய்க்கால் மேல் புதிய பாலம் கட்டிடவும், வேம்பனூர் சிவன் கோவில் அருகில் செல்லும் சாலை புதிய தார் சாலை அமைக்கவும் ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர், தெரு விளக்கு மற்றும் குப்பைகள் மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தார். மேலும் கிராம ஊராட்சியை நாகர்கோயில் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்றும் பன்றி வாய்க்காலை சீரமைத்து தூர்வாரி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார். 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் உடனே வழங்கவும். ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய பணியை துவங்கவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
Next Story

