சிங்கப்பெருமாள் கோவில் அருகே பதுங்கி இருந்த ரவுடி போலீசாரால் சுட்டு பிடிப்பு

X

சிங்கப்பெருமாள் கோவில் அருகே பதுங்கி இருந்த ரவுடி போலீசாரால் சுட்டு பிடிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக் (28). ரௌடியான இவா் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அசோக் இருந்து வருகிறாா். இந்த நிலையில், அதிகளவில் கஞ்சா விற்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூா் வனப் பகுதியில், பதுங்கி இருந்த அசோக்கை போலீஸாா் கைது செய்யச் சென்றனா். அப்போது அசோக் குமாா் அங்கிருந்த காவலா்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளாா்.இதைத் தொடா்ந்து அசோக்குமாா் தப்பிக்காமல் இருப்பதற்காகவும், தற்காப்புக்காகவும் போலீஸாா் அசோக்குமாரின் காலில் சுட்டனா். பின்னா், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அசோக் குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story