திருச்சியில் அறிய வகை புற்றுநோய் கட்டி அகற்றம்

X

மின்வாரிய ஊழியர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்
பெரம்பலூரை சேர்ந்தவர் மின்வாரிய பணியாளர் சுரேஷ் ( வயது 54 )கடந்த 4 வருடங்களாக தீராத வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை திருச்சி சில்வர்லைன் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் பின்னர் மருத்துவ குழு முழு பரிசோதனைகள் மேற்கொண்டது. இதில் அரிய வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கிட்டதட்ட 20 மணி நேரம் போராடி 23கிலோ எடை உள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றினர். இது தொடர்பாக சில்வர் லைன் மருத்துவமனை ப்நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் கூறும் போது, சுரேஷுக்கு ஏற்பட்டிருந்தது அரிய வகை புற்றுநோய். இதில் வயிற்றில் கட்டி பரவி உள்ள பகுதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அதிக வெப்பத்தினால் ஆன எனப்படும் கீமோதெரபி செலுத்தப்பட்டது. அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், அதன் பிறகு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரவில் எங்களின் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்பொழுது பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். ஒரு மனிதனின் உடலில் ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கும். இவருக்கு ஏழு லிட்டர் வரை ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த அளவுக்கு இரத்த இழப்பு ஏற்பட்டது என்றார்
Next Story