தேசிய அளவிலான ட்ரோன் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம்

X

தேசிய அளவிலான ட்ரோன் தொழில் நுட்பம் குறித்த தேசிய அளவிலான மூன்று நாள் ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம்,படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, இயந்திர பொறியியல். எஸ்ஏஇ இந்தியா ட்ரோன் டெவலப்மென்ட் அமைப்பு ஆகியவை இணைந்து தேசிய அளவிலான ட்ரோன் தொழில் நுட்பம் குறித்த தேசிய அளவிலான மூன்று நாள் ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம் தொடங்கியது. முதல் நாள் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் காசிநாதபாண்டியன் முன்னிலை வகித்தார். கல் லூரிஅசோசியேட்டீன் தினேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக சிவிஆர்டி அமைப்பின் அசோசியேட் இயக்குனர் பாலமுருகன், எஸ்ஏஇ அமைப்பின் தலைவர் தினேஷ்ஷாம் சுந்தர் ட்ரோன் டெவ லப்மெண்ட் சேலஞ்ச் சாதனையாளர் மகேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். ட்ரோன் பயன்பாடுகள் குறித்தும், புதுவகை யான ட்ரோன்கள் வடிவ மைப்பு, மேம்பாடு குறித்து மாணவர்களிடையே பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு விருந்தி னர்களுக்கு நினைவு பரி சுகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ட்ரோன் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். மேலும், ட்ரோன்களின் செயல் திறன்கள், வடிவமைப்புகள் குறித்த போட்டிகள் இன்று நடை பெற உள்ளது. இதில் இந் தியா முழுவதிலும் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகள், ட்ரோன் வல்லுனர்கள் கலந்து கொண்டுள்ள னர். வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிக் கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் இயந்திர பொறியியல் துறை தலைவர் ஏகாந்த மூர்த்தி செய்து வருகிறார். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி இணை டீன் சிவக்குமார் நன்றி கூற உள்ளார்.
Next Story