காவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27ஆம் தேதி மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்,.இதில் காவலருடன் இருந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவலரை இழந்து வாடும் குடும்பத்தினரை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் நேற்று ( மார்ச்.29)நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து அதிமுக பக்க பலமாக இருக்கும் எனவும், சட்டசபையில் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம் என்றும் தொடர்ந்து இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறி உரிய நிவாரணம் கிடைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும்,மேலும் ஆர்.பி.உதயக்குமார் குழந்தைகளிடம் தைரியமாக இருக்க வேண்டும். அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும். உங்கள் அப்பாவுக்காகவே தமிழ்நாடே குரல் கொடுக்கிறது என கூறி ஆறுதல் தெரிவித்தார்.
Next Story

