காவேரிப்பாக்கம்:சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில். 15-வது நிதி ஆணைய சுகாதார பணிகள் திட்டத்தில் ரூ.1% கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன் தலைமை தாங்கினார். வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் க.ஞான சுந்நரம், வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.. ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். மேலும் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற துணை சுகாதாரமைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதாகுப்புசாமி, பேரூர் தி.மு.க. செயலாளர் பாஸ் என்கிற நரசிம்மன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப உதவியாளர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தேசிய ஆயுஷ் குழுமம், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு திட்டம் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு யுனானி மருத்துவப்பிரிவு கட்டி டத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
Next Story